28 ஆண்டுகள் கழித்து களமிறங்கும் திமுக ?

72

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தி.மு.க. போட்டியிடுகிறது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 1996 வரை காங்கிரஸ் எம்.பி.க்களே இருந்தனர். கடந்த 1991-ம் ஆண்டு தி.மு.க. சார்பாக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிடவில்லை. தி.மு.க. நேரிடையாக ஒரு முறைகூட தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது. தி.மு.க. கூட்டணி சார்பாக புதிய தமிழக கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிக்கே விட்டு கொடுத்து வந்தது.

தற்போது 1991-க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரிடையாக போட்டியிடுகிறது. இதுவரை தி.மு.க. நேரிடையாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறாததால், இந்த முறை எப்படியும் தி.மு.க. வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.