வேறொருவர் மனைவி மீது ஆசை..! திமுக பிரமுகர் செய்த கேவலமான செயல்..!

2021

திருப்பூரில் கடனை திரும்ப செலுத்திய பிறகும் வீட்டை ஆக்கிரமித்து மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தி.மு.க பிரமுகர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் தனது வீட்டை அதேபகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.

பணத்தை திருப்பி கொடுத்த பிறகும் தி.மு.க பிரமுகர் வீட்டை ஆக்கிரமித்து மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க பிரமுகர், கார்த்திக் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement