தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், நடப்பு கூட்டத்தொடரை வரும் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தொடரில் நேற்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் விவகாரம், கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்பட்டது. கஜா புயல் நிவாரணப் பணிகள் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப முடிவு செய்துள்ளன. இதனால் இன்றைய அவை நடவடிக்கையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of