தரமற்ற கொள்ளிட பாலம், விசாரணைக்கு உத்தரவிட திமுகவினர் ஆர்ப்பாட்டம்

330
kollidam

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கொள்ளிடத்தில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் தரமற்றதாக கட்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பாலம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்தி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றில் 67 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. 1500 மீட்டர் நீளத்தில் 12.9 மீட்டர் அகலத்திலும் இந்த பாலம் கட்டப்படுகிறது, தற்போது மழை. வெள்ளம் வந்தபோது பாலத்தின் ஒரு சில பகுதிகளில் சேதம் அடைந்துள்ளது.

இதனால் இந்த பாலம் தரமற்றதாக கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி விட்டு விசாரணை நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.