ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி – தி.மு.க ஆர்ப்பாட்டம்

581

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து தி.மு.க சார்பில் திருவாரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், கெயில், நியூட்ரினோ போன்ற தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கும், ONGC-க்கும் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement