அழகிரிக்கு தயாராகும் ஷாக் – ஸ்டாலின் தடபுடல் ஏற்பாடு

582

மு.க.அழகிரிக்கு செக் வைக்கும் வகையில் விருதுநகரில் தென் மண்டல மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாம்.

திமுகவின் தென்மண்டல மாநாடு வரும் மார்ச் 6-ம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது. இதற்கான பொறுப்பை ஏற்றிருப்பவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.

முதலில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் மாநாடாக நடத்தலாம் என தென் மாவட்ட செயலாளர்கள்

கேட்டுக்கொண்டதால், தென் மண்டல மாநாடு என அறிவிக்கப்பட்டது.

விருதுநகரிலிருந்து 8 கி.மீ தொலைவில் 4 ஏக்கர் பரப்பளவில் இடம் சுத்தம் செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் தற்போது வேகம் பிடித்துள்ளனவாம். கடந்தஆண்டு மார்ச் 25-ம் தேதி ஈரோட்டில் கொங்கு மண்டல மாநாடு நடத்திய ஸ்டாலின் இந்த ஆண்டு மார்ச் மாதம் விருதுநகரில் தென் மண்டல மாநாடு நடத்துகிறார்.

ஏற்கனவே தூத்துக்குடியில் கனிமொழியை களமிறக்கி அழகிரிக்கு செக் வைக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வரும் ஸ்டாலின், அடுத்ததாக தென் மண்டல மாநாட்டையும் நடத்தி அழகிரி தரப்பை மிரளவைக்க  நினைக்கிறார்.

இந்த விவகாரம் அழகிரிக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of