திமுக சீட் கொடுக்காதது ஏமாற்றமளிக்கிறது – ஜவாஹிருல்லா

511

திமுக கடைசி நேரத்தில் சீட் தராமல் மறுத்தது ஏமாற்றமளிக்கிறதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

stalin

மனித நேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை மண்ணடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நிலைபாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா ,

மேலும் திமுகவிடம் தங்கள் கட்சி தனி சின்னத்தில் நிற்பதற்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு கேட்டனர். இதனால் கூட்டணி குறித்து சரியான முடிவு எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் தங்களுக்கு சீட் கொடுக்காமல் புறக்கணித்தது ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் கூட்டணி தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமமுக விடம் கூட்டணி குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு  அறிவிக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of