எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தவேண்டும் – திமுக வலியுறுத்தல்

264

18 தொகுதிகளுடன் எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள்,எம் பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திமுக  மாவட்டச் செயலாளர்கள்,எம்.பி க்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி,ஆர்.எஸ்.பாரதி, வி.பி துரைசாமி,சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

திமுக மாவட்டச்செயலாளர்கள், எம்பிக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் 18 தொகுதிகள் மட்டுமல்லாமல் எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்ட்டது.

ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் அரவக்குறிச்சி, திருப்பறங்குன்றம், ஒட்டபிராமம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அனுகி கோரிக்கை வைக்க இருப்பதாக திமுக கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of