பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது ஏமாற்று வேலை – ஸ்டாலின் 

213

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை  என்று  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த  வேலப்பன்சாவடியில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து உரையாற்றிய மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என கூறினார்.

இருந்த போதும் இந்த அறிவிப்பை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும் என்றும், முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of