மோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்

197

திமுக தலைவர் முக  ஸ்டாலின் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், மும்மொழி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்வி கொள்கையில் இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது என்றும் தொழிற்பயிற்சி அறிமுகம், சாதி படிநிலைகளை வலுப்படுத்தும் வகையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பை குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவதத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குகிறது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement