திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு 3 வது முறையாக உடல்நலக்குறைவு ஏன்?

494

திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த காலத்தில் 3வது முறையாக அவர் உடல் நல பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுகவினர் சோகமடைந்துள்ளனர். அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர் துரைமுருகன்.

ஒருபக்கம் உணர்ச்சிவசப்படுவது இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு இருதய தொந்தரவும் இருக்கிறது. கருணாநிதி இறந்த சமயத்தில்கூட மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தேர்தல் ரிசல்ட் அன்று அதாவது கடந்த 23-ம் தேதி துரைமுருகனுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இதனால் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மன உளைச்சல் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்ட நிகழ்வில்கூட துரைமுருகன் கலந்து கொள்ளவில்லை. தனது மகனை தேர்தல் களத்தில் நிறுத்த முடியவில்லை என்ற மன உளைச்சலில்தான் இருந்தார் துரைமுருகன்.

சிறிது நாட்களாக உடல்நிலை ஓரளவு தேறி இருந்தாலும், காய்ச்சல் மட்டும் இன்னும் குணமாகவில்லை என்பதால், சென்னையிலேயே தங்கி அப்போல்லோவில் உடல்நிலையை சோதனை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் வந்தன.

 நேற்றுகூட தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்தும், அதிமுக அரசையும் குறை கூறி செய்தியாளர்களிடம் பேசினார் துரைமுருகன். இந்நிலையில், அவருக்கு திரும்பவும் உடல் சுகவீனம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கவலை இதனால் வழக்கமாக சிகிச்சை மேற்கொள்ளும் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக எம்பிக்கள் நேற்று பதவியேற்ற சந்தோஷம் அடங்காத நிலையில், துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, தொண்டர்களுக்கு கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of