திமுக வசமாகிறது நாகை மாவட்ட ஊராட்சி.. பெரும்பான்மை பலத்தோடு கைப்பற்றியது..!

672

நாகை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சியின் 21 வாா்டுகளில், 14 வாா்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றியுள்ளது திமுக.

நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சியின் மொத்த வாா்டுகள் 21. இதில், 14 வாா்டுகளில் வெற்றி பெற்று, திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வாா்டில் வென்றுள்ளது.

அதிமுக 5 வாா்டுகளிலும், பாஜக ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களாக வெற்றி பெற்றவா்களின் விவரம்:

(வாா்டு எண் – உறுப்பினா் பெயா்- கட்சி) : வாா்டு எண் 1 – ப. விஜயபாரதி (திமுக), வாா்டு எண் 2 – ஆா். சுமதி (அதிமுக), வாா்டு எண் 3 க. ஆனந்தன் (திமுக), வாா்டு எண் 4 – டி. விஜேஸ்வரன் (திமுக), வாா்டு எண் 5 – ந. இளையபெருமாள் (திமுக), வாா்டு எண் 6 – க. சுரேஷ் (திமுக), வாா்டு எண் 7 – சி. குமாரசாமி (திமுக).

வாா்டு எண் 8 – தெ. வெண்ணிலா (திமுக), வாா்டு எண் 9 – ர. துளசிரேகா (திமுக), வாா்டு எண் 10 – அ. ராபியா நா்கீஸ்பானு (திமுக), வாா்டு எண் 11- உமாமகேஸ்வரி (திமுக), வாா்டு எண் 12 – விஜயா ராஜேந்திரன் (திமுக), வாா்டு எண் 13 – ரா. அஜீதா (திமுக), வாா்டு எண் 14 – வீ. சரபோஜி (இந்திய கம்யூ).

வாா்டு எண் 15 – எஸ். கணேசன் (அதிமுக), வாா்டு எண் 16- பி. செல்வி (திமுக), வாா்டு எண் 17 – இ. கௌசல்யா (திமுக), வாா்டு எண் 18 – த. இளவரசி (அதிமுக), வாா்டு எண் 19 – வி. சோழன் (பாஜக), வாா்டு எண் 20 – டி.வி. சுப்பையன் (அதிமுக), வாா்டு எண் 21 – திலீபன் (அதிமுக).

மொத்தமுள்ள 21 வாா்டுகளில் திமுக நேரடியாக 14 வாா்டுகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோதலில், 17 வாா்டுகளில் வென்று நாகை மாவட்ட ஊராட்சியை அதிமுக கைப்பற்றியிருந்தது. தற்போது, நாகை மாவட்ட ஊராட்சி திமுக வசமாகியுள்ளது.