இது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி

445

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ் உள்பட எந்த மொழிகளின் வளர்ச்சிக்காகவும் நிதி ஒதுக்கவில்லை.

தமிழின் வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் தான் பெயர் வைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில்கூட பெயர்கள் வைக்கப்படுவதில்லை. அவற்றை தமிழில் மொழி பெயர்க்க முடியவில்லை என்று கூறினார்.

8 வழிச்சாலைக்கு புதிதாக பெயர் வைத்திருக்கிறார்கள். என்ன பெயர் மாற்றம் செய்தாலும் மக்களின் விளை நிலத்தை பறிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது.