திமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி…!

306

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அதிமுக அரசையும், மத்தியில் உள்ள பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை பார்த்து வியந்த திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளராக அதிகரப்பூர்வமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of