திமுக இளைஞரணியில் அதிரடி..! – வயது வரம்பின் விதி மாற்றம்…!

228

திமுக இளைஞரணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்துவருகிறது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, மண்டல மாநாடு நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 30 வயது வரை இளைஞரணியில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி, 35 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.