DMS – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை

380

DMS – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனைக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

திருச்சியில் நவீனப்படுத்தப்படும் விமான நிலைய கட்டிடத்திற்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை விமான நிலையத்தில் 2 ஆம் கட்ட நவீன மயமாக்கல் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை DMS- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயிகள் சார்பில் முதலமைச்சர் பழனிசாமி வழங்கிய வெள்ளி தேங்காயை பிரதமர் மோடி அன்புடன் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of