சயன் மனோஜை கைது செய்யக் கூடாது! ஐகோர்ட் அதிரடி!!

428

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவித்திருந்தது.

அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனோஜ் மற்றும் சயான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் அவர்கள் இருவரையும் வரும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது