தேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா..? எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..! சிறு தொகுப்பு..!

1553

உணவே மருந்து என்று ஆரோக்கியமுடன் வாழ்ந்து வந்த நம் தலைமுறையினர், தற்போது மருந்தே உணவு என்று வாழ்ந்து வருகின்றனர். பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பல்வேறு உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டு இன்றைய தலைமுறையினர், நோய்களை அதிகளவில் பெற்று வருகின்றனர்.

இதனால் உடல்நலம் குறித்தும், உணவுப்பொருட்கள் குறித்தும் அணைவரும் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  எந்தெந்த உணவுகளோடு, எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றியும், எந்த நோய்கள் இருந்தால் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றியும் தற்போது காணலாம்..,

1. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு உண்டால் ‘வெண் மேகம்’ போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

2. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

5. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

6. காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் குடிக்கலாம்.

7. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

8. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

இவ்வாறு எந்தெந்த உணவுப்பொருட்களை எந்தெந்த சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து செயல்பட்டால், நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்பது நிதர்சனமான உன்மை.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
1 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Davidjoys Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Davidjoys
Guest
Davidjoys

Thanks for information