கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணிகளை வழங்க கூடாது

182
chennai-high-court

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணிகளை வழங்க கூடாது என்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி என்ற இடத்தில், ஆயிரத்து 259 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சர்வதேச ஒப்பந்த புள்ளிகளை கோரியது.

இந்த ஒப்பந்தப் புள்ளிகளை திறக்க தடை விதிக்க கோரி பிரான்சை சேர்ந்த சூயஸ் இன்டர்நேஷ்னல் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், டெண்டர் நடவடிக்கைகளை தொடரவும், முடிவுகளை அறிவிக்கவும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

ஆனால், டெண்டர் ஒப்பந்தப் பணிகளை, தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here