12-ம் வகுப்பில் 80% குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சான்று வழங்க கூடாது

403

12ஆம் வகுப்பில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிப் படிப்பையும், மேற்கிந்திய தீவுகளில் மருத்துவ படிப்பையும் முடித்த தாமரைச் செல்வன் என்பவர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார். அதேசமயம் குறைந்த மதிப்பெண்களுடன், பண பலத்தின் மூலம் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பது குறித்து பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 12ஆம் வகுப்பில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of