சென்னை புதுக்கல்லூரி முதல்வர் பணி நியமனத்தில் தலையிடக் கூடாது

318

சென்னை புதுக்கல்லூரி முதல்வர் பணி நியமனத்தில் தலையிடக் கூடாது என்று சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியின் முதல்வராக அப்துல் ஜப்பாரை நியமித்து கல்லூரி நிர்வாகக் குழு உத்தரவிட்டது. அவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதுக்கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், புதிய முதல்வரின் கல்வித் தகுதி, பல்கலைக்கழக மானிய விதிகளின்படி இல்லை எனக் கூறி, பல்கலைக்கழக செனட் குழு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வரின் கல்வித் தகுதி தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என, கல்லூரி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, புதிய முதல்வர் செயல்பாட்டில் தலையிடக் கூடாது என்று சென்னை பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை பல்கலைக்கழகம் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of