ஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது – மத்திய அரசு அறிவுறுத்தல்

298

ஆதார் எண் இல்லாததற்காக, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நாடு முழுவதும் 86 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

சரியான நபர்களுக்கு பொது வினியோக பலன்கள் சென்றடைவதை ஆதார் அடையாளம் உறுதி செய்வதாக கூறினார்.

அதேசமயம் ஆதார் எண் இல்லாததற்காக, ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்றும் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பில் இருந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தின் பெயரை நீக்கக்கூடாது எனவும் மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of