அரசின் இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிய வேண்டாம் – டெல்லி அரசு உத்தரவு

248
aadhar

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு செயலாளர் அஜய் சக்தி , சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து துறை முதன்மை செயலர்கள், செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர், தங்கள் ஆதார் எண், மொபைல் போன் எண் உட்பட, தங்களது தனிப்பட்ட விபரங்களை, துறையின் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளனர் என்றும் அவற்றை உடனடியாக நீக்கி விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட விவரத்தை, அரசின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.