“நான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் இனிமேல் இப்படி பண்ணாதீங்க..” – ரசிகர்களுக்கு உதயநிதியின் “டச்”

429

தான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய பெயரையோ அல்லது புகைப்படத்தையோ உபயோகிக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நான் சம்பந்தப்படாத மற்றும் பங்கேற்காத நிகழ்சிகளில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அதாவது, ‘இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் , நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பட்டப் பெயர்கள் சூட்டுவதும் மேலும் தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது பட்டாசு வெடிப்பதையும் திமுகவினர் கைவிட வேண்டும் என்றும் அந்த பதிவு உதயநிதி ஸ்டாலின் தன் தொண்டர்களை குறிப்பிட்டு கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of