பறவைகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி உங்களுக்கு தெரியுமா?

1993

தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை, காதல் தோல்வியால் காதலர்கள் தற்கொலை, கடன் தொல்லையால் தற்கொலை இப்படியான செய்திகளை நாம் கேள்விபட்டு இருப்போம், பார்த்திருப்போம்.

ஆனால் பறவைகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி உங்களுக்கு தெரியுமா? இது குறித்த தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.ஒரு மனிதனின் தற்கொலைக்கு கடன், காதல் என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பறவைகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் இடம் என்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா கூறப்படுகின்றது.

பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்காவில் சுமார் 3500க்கு மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று. இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

இதற்காக ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தங்கிவிடும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன. ஆனால் உள்நாட்டு பறவைகளின் நிலைமையோ தலைகீழாக மாறி தற்கொலையில் முடிந்துவிடுவது கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.

உள்ளூர் பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்கு கூறப்படும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களாக உள்ளது. ஜாதிங்கா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று பெரும் குழப்பத்திற்கு ஆளாகிடும் ஆயிரக்கணக்கான பறவைகள் இரவு 7மணி முதல் 10மணி வரை வெகு உயரத்தில் குரலெழுப்பியபடி பறக்கின்றன.

பின்னர் கிராமத்தில் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கம்பங்களில் வேகமாக வந்து மோதி படுகாயமடைந்து தற்கொலை செய்து கொள்கின்றன. இது குறித்து இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த பறவை இன ஆராய்ச்சியாளர்கள் ஜாதிங்கா பகுதிக்கு வருகை தந்து பல ஆண்டுகளாக அதே பகுதியில் முகாமிட்டு ஆய்வுகள் மேற்கொண்டும் பறவைகளின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய இயலவில்லை.

இருப்பினும் விளக்கு கம்பங்களின் ஒளிஈர்ப்பு, மூடுபனி, பறவைகளின் தடம்மாறுதல், நிலத்தடி நீரின் காந்த குணங்கள் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை தொரிவித்துள்ளனர் ஆராய்ச்சியளர்கள். மேலும் பறவைகள் தற்கொலை காலத்தில் விளக்கு கம்பங்களில் மோதி அடிபட்டு கிடக்கும் பறவைகளை உணவுக்காக எடுத்து பயன்படுத்திக் கொள்வதாக கூறுகின்றனர் ஜாதிங்கா பகுதி மக்கள்.

ஆனால் இன்று வரை பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு புரியாத புதிராக உள்ளது…

மைதிலி கோபிநாத் மற்றும் செய்திக்குழு.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of