நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா? ரூட்டை பார்த்து கேட்ட கேப்ரியல்

595

வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட்டும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் மைதானத்தில் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.கேப்ரியல் வீசிய துள்ளியமான பந்து வீச்சில் இருந்து ஜோ ரூட் தப்பினார். பலமுறை இப்படி தப்பியதால் விரக்தியில் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த கேப்ரியல்ஸ் ‘‘என்னை நோக்கி ஏன் சிரிக்கிறீர்கள்?. நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா?’’ என்றார்.

அதற்கு ஜோ ரூட், ‘‘அதை அவமானப்படுத்தாதீர்கள். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், நீங்கள் என்னை நோக்கி சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேப்ரியல் பதில் அளித்துள்ளார்.

கேப்ரியல் பேசிய ஏதும் மைக் ஸ்டம்பில் பதிவாகவில்லை. ஜோ ரூட் பேசியது மைக் ஸ்டம்பில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேப்ரியலுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படித்தான் இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of