டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா?

740

வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா என சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா எழுந்துள்ள நிலையில், அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோலியின் கேப்டன்ஷிப் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்தும் சமூக வளைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

முன்னாள் வீரர்களான வீரேந்திர ஷேவாக், கங்குலி ஆகியோர் ரவி சாஸ்திரியை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக சமீபத்தில் பேசிய ரவி சாஸ்திரி, கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த இந்திய அணியை விட தற்போதுள்ள அணி சிறந்த அணி என்றும் முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்தது இல்லை என கூறினார்.

இது முன்னாள் வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், வெளிநாட்டு மண்ணில் ராகுல் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா? என சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, நாடுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதை ரவி சாஸ்திரி மறந்துவிட்டாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of