நீங்க பளபளப்பாக மாறனுமா..!

975

உணவு உண்ணும் முறை என்பது ஒரு இயற்கை. முற்காலத்தில் இயற்கையாக உணவு முறைகள் இருந்தது வந்தது. ஆனால், உணவில் எந்த கலப்படமும் இல்லாமலும், சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.Related image

இதனால், நமது உடல் நல்ல சத்துள்ளதாகவும், உடல் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும். இதுமட்டுமல்லாமல், மருந்துகள் இல்லாமல் உணவுமுறை இருக்கும். அதனால் பயபடாமல் உணவுகளை உட்கொள்ளலாம்.

ஆனால், இக்காலக்கட்டத்தில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும், வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.  அதை நாம் உண்ணும்போது, நமக்கு பல தீங்குகளை விளைவிக்கிறது.

இந்த உணவுமுறையின், விளைவுகள் தான் இன்றைய தலைமுறைகளில் வாழும் இளைஞர்களுக்கு சிறு வயதிலேயே, சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கண்பார்வை குறைபாடு, நோய் எதிர்ப்பு தன்மை குறைபாடு, வயதுக்கு மீறிய உடல்பருமன், சிறுவயதிலேயே பூப்பெயர்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.Image result for udal paruman

இருந்தாலும், நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் இன்றைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கெல்லாம் காரணம், அவர்களுடைய வேலை பளு, நேரமின்மை, மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப பர்ஸ்ட் புட் என விதவிதமான உணவுகளை உட்கொள்கின்றனர். இதனை கொஞ்சமாவது குறைக்க, காலையில் சிற்றுண்டிக்கு பதிலாக பழங்களை உண்ண வேண்டும். Image result for fast foods

இந்த வகையில், தினமும் மாதுளை பழம் சாப்பிட்டால், இரத்தம் சுத்தமாகும், புதிய இரத்தம் சுரக்கும், உடல் பலம்பெறும், எலும்புகள் பற்களில் ஏற்படும் நோயை நீக்கும், முக்கியமாக மலச்சிக்கலையும் தவிர்க்கும் தன்மை உடையது.Related image

இதேபோல், தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால், புதிய இரத்தம் சுரக்கும், உடல் பலம்பெறும், தோல்களை வழுவழுப்பாக்கும், நரம்புத்தளர்ச்சியை தவிர்க்கும்.Related image

திராட்சியை எடுத்துக்கொண்டால், நல்ல பசி உண்டாகும், வயிற்றுப்புண் குணமாகும், இதுபோன்ற பழங்களை காலைநேரத்தில் உட்கொண்டால், நம் உடலுக்கு தேவையான சத்துக்கிடைத்துவிடும்,  இதுமட்டுமல்லாமல் எனர்ஜியும் கிடைக்கும். Related image

முடிந்த அளவிற்கு வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டில் செய்யும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே போதுமானது.  நமது உடல் பலம் வாய்ந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

Advertisement