அறுவை சிகிச்சையின் போது தூங்கிய மருத்துவர்

505

சீனா, ஒரு மருத்துவமணையில் மருத்துவராக பணிபுரிபவர் லுயோ ஷான்பெங். இவர் தொடர்ந்து ஓய்வின்றி 20 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக பல இடங்களிலிருந்து பாராட்டுகள் வாங்கி வருகிறார். ஆனால் தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப்பின்  அறுவை சிகிச்சை மேசையிலேயே தூங்கும் புகைப்படம் வெளியானது. அவரின் 20 மணி நேர சிகிச்சை பணியை காட்டிலும் இந்த புகைப்படம் பிரபலமானது.

புகைப்படத்தில் லுயோ,  நோயாளி ஒருவரின் கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைத்துவிட்டு, அந்த அறுவை சிகிச்சை மேசையிலேயே சாய்ந்து தூங்குகிறார்.

அவர் தூங்கிய படியே நோயாளியின் ஒட்டவைத்தகையை பிடித்தவாறே துங்குகிறார். இந்த புகைப்படம் சீனாவில் வைரலானது. அன்று ஒரு நாள் மட்டும் 5 சிகிச்சைகளை முடித்துள்ளார். அன்றைய ஆறாவது அறுவை சிகிச்சை அவருக்கு எட்டு மணி நேரம் நீடித்திருக்கிறது. அவரின், களைப்பையும் மீறி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்கிறார். அன்று அந்த நோயாளிக்கு அப்போது அறுவை சிகிச்சை செய்யாதிருந்தால், அவர் தனது கையை இழக்க நேரிட்டிருக்கும் அதனாலே விரைந்து அந்த சிகிச்சையை செய்தார்.

அவர் இதைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார், சற்று ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடினேன், ஆனால் தூங்கிவிடுவேன் என்று நினைக்கவில்லை.அந்த நோயாளியின் கையில் போடப்பட்ட கட்டு காய்வதற்கு முன் அவர் கையை கீழே வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார்.