டாக்டரின் துணியை இழுத்த குழந்தை! இது தான் காரணமா?

177

வியட்நாமில் பிஹஓங் சாவு இன்டர்நேஷனல் என்ற ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் தன்னை பிரசவம் பார்த்த டாக்டரின் ஆடையை அந்த சிசு கெட்டியாக இறுக பிடித்துக்கொண்டது. குழந்தை நீண்ட நேரம் இப்படியே டாக்டர் டிரஸ்ஸை பிடித்து கொண்டிருப்பதை ஆஸ்பத்திரி நிர்வாகம் போட்டோ எடுத்து, அதை பதிவிட்டது.

BABY

அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ‘நான் பிறந்தது இந்த டாக்டருக்கு பிடிக்கவில்லையா?’ என்று அந்த குழந்தை நக்கலாக கேட்பதாக கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

மேலும், டாக்டர் எனக்கு பசிக்குது, சாப்பாடு வேணும்’ என்று குழந்தை கேட்கிறது போலும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் பிறந்தவுடன் தாயை தேடாமல், டாக்டரின் டிரஸ்ஸை கெட்டியாக பிடித்து கொண்டதால், ‘பேபி ஸ்ட்ரோங் ‘, ‘பாஸ் பேபி’ என செல்லமான பெயர்களை வைத்து கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.