கருப்பான நுரையீரல்.. அறுவை சிகிச்சை போது அதிர்ச்சியான மருத்துவர்.. வைரலாகும் வீடியோ!

36960

சீனாவைச் சேர்ந்த 52 வயதான நபர் சுமார் 30 ஆண்டு காலம் தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.

அவரது உடலில் அறுவைச் சிகிச்சை செய்து உடலுப்புகளை மருத்துவர்கள் அகற்றினர். அப்போது அவரது நுரையீரலை அகற்றியபோது மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த நபரின் நுரையீரலானது அடர் கருப்பு நிறத்தில் இருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த மருத்துவர் ”தனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு நுரையீரலை பார்த்தது இல்லை எனவும் 30 ஆண்டுகாலம் தொடர்ந்து சிகரெட் புகைத்ததன் விளைவாக நுரையீரல் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இனிமேல் அந்த நுரையீரலை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

இதனிடையே மருத்துவர்கள் நுரையீரலை அகற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 25 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of