பொழுதுபோக்குக்காக பலி கொடுக்கப்பட்டார்களா “கிளாடியேட்டர்கள்” ?

306

உலகம் தோன்றிய காலம் முதலே, மனிதனுக்கு பொழுதுபோக்கு என்பது அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது. ஆடல், பாடல் தொடங்கி கேளிக்கை நிகழ்ச்சிகள் என்று பணம் கொண்ட மனிதன் தனது நேரத்தை செலவிட பல பொழுதுபோக்குகளை கண்டறிந்தான்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி உலகில் செழிப்போடு வாழ்ந்த பல சாம்ராஜ்யங்களில் முதன்மையானவை ரோமானிய சாம்ராஜ்யம். விண்ணை முட்டும் கட்டிடங்கள் எண்ணில் அடங்கா செல்வம் என்று புகழோடு வாழ்ந்த மாபெரும் சாம்ராஜ்யம். மாபெரும் சாம்ராஜ்யம் ஆதலால் இவர்களின் பொழுதுபோக்கும் ஆடல், பாடலோடு நின்று விடாமல் “கிளாடியேட்டர்” என்ற புதுவகை பொழுபோக்கையும் அறிமுகம் செய்தனர்.

கிறிஸ்து பிறப்புக்கு முன் முதலாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட இந்த பொதுப்போக்கு அமசம் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. “கிளாடியேட்டர்” குத்துவாள் கொண்ட மனிதன் என்பதே இந்த சொல்லின் பொருள் அக்கால ரோமானிய மன்னர்கள் கொலோசியம் என்ற மிக பெரிய உள்ளரங்கில் கூட, அந்த அரங்கின் நடுவே இரு உயிரினங்களுக்கு இடையே சண்டை நடக்கும். இந்த சண்டை இரு வீரர்களுக்கு இடையே அல்லது மனிதனுக்கும் அவனுக்கு நிகரான மிருகத்துக்கும் இடையே நடைபெறும்.

சில காலகட்டத்திற்கு பிறகு ரோமானிய மன்னர்கள் தங்களுக்கான சிறந்த கிளாடியேட்டர்களை தேர்ந்தெடுத்து அவர்கள்மீது பந்தயம் கட்டி போட்டியிட்ட தொடங்கினர். தங்கள் தேர்ந்தெடுக்கும் வீரர்களுக்கு அம்மன்னர்கள் சிறந்த போர்க்கருவிகளை கொடுத்தனர். Samnite, Thracian, Gaul என்று அவர்களுக்கு பெயர் சூட்டினார்.

பிற நாடுகளில் இருந்து பிடித்து வரப்பட்ட அடிமைகள், போர் கைதிகள் என்று பலர் இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டனர், பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கிய இந்த பொழுதுபோக்கு அம்சம் காலப்போக்கில் மறைந்து போனது, ஆனால் இந்த உயிர்களை குடித்த அந்த கொலோசியங்கள் இன்றளவும் ரோம் நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது.