சிறுவனை பள்ளிக்கு போகவிடாமல் காலை பிடித்து கெஞ்சிய நாய்

717

இங்கிலாந்தில் பள்ளிக்குச் செல்லும் சிறுவனை, அவன் வளர்த்த நாய் போகவிடாமல் மல்லுக்கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டனைச் சேர்ந்த மேக்ஸ் மோஸ் என்ற 9 வயது சிறுவன் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை வளர்த்து வருகிறான். நீண்ட விடுமுறையில் இருந்த சிறுவன் குட்டி நாயுடன் அதிக நேரம் பொழுதைக் கழித்துள்ளான்.

பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்குப் புறப்பட்ட சிறுவனின் காலைக் கட்டிக் கொண்டு போகவிடாமல் தடுத்தது அந்த நாய்க்குட்டி. அதையும் மீறி அந்தச் சிறுவன் நடந்து செல்ல முயன்றபோது, அப்போதும் தடுத்த நாயிடம் சிறுவன் கெஞ்சிக் கொண்டே செல்லும் காட்சிகள் காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.