7 அடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த தெருநாய்..!

915

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிடுவதற்காக வருகை தந்தனர்.

இந்த நிலையில் முதற்கட்டமாக வந்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வருகை தந்தார்.

தற்பொழுது மாமல்லபுரத்தில் உள்ள சீன – பல்லவ வரலாற்றை உணர்த்தும் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர். அப்போது சிற்பங்களின் தொன்மை குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார்.

இந்த நிலையில் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் பார்வையிடும்போது ஒரு நாய் ஒன்று சாகவாசமாக உள்ளே நுழைந்து சுற்றி திரிந்தது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிவருகிறது. 7 அடுக்குகளையும் மீறி சாதாரண நாய் எப்படி உள்ளே நுழைந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Ashanmugam Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Ashanmugam
Guest

மனுஷனுக்குதான் ஆயிரம் கெடு பிடி. தெருவில் அலைந்து திரியும் நாய்யுக்கு ஏது கெடுபிடி? சுதந்திர பூமியில் சுதந்திரமாய் உலா வருகிறது.