தாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்

646

தாய்லாந்து நாட்டில் தனது தாயால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டதாக சொல்லப்படும் பச்சிளம் குழந்தையை தெரு நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

தனது கர்ப்பத்தை பெற்றோர்களிடமிருந்து மறைப்பதற்காக அந்த 15 வயது இளம் பெண், இப்படி செய்ததாக சொல்லப்படுகிறது. பேன் நாங் காம் என்ற கிராமத்தில் பிங் பாங் என்ற அந்த தெரு நாய் குரைத்துக் கொண்டே மண்ணை தோண்டியுள்ளது.

இதை கவனித்த அந்த நாயின் உரிமையாளர் குழந்தையின் கால் ஒன்று மண்ணில் தெரிவதை பார்த்துள்ளார்.

Thailand dog

உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சுத்தம் செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர் .

கார் விபத்து ஒன்றுக்கு பிறகு பிங் பாங்கின் கால்களில் ஒன்று பயனற்று போனதாக அதன் உரிமையாளர் உசா நிசாய்கா கூறுகிறார் .

தற்போது அந்த குழந்தையின் தாய் மீது, பச்சிளம் குழந்தையை கைவிட்டது மற்றும் கொலை செய்ய முயற்சி செய்தது ஆகிய குற்றங்கள் பதியப்பட்டுள்ளன. மேற்கொண்டு அந்த பெண்ணின் பெற்றோர் அந்த குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of