பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்..!

256

மத்தியப்பிரதேசத்தின் சோலா பகுதியில் ஷோவும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். நாய்களின் மீது பிரியம் கொண்ட ஷோ அவர் வீட்டுக்கு வெளியில் சுற்றித்திரிந்த தெரு நாயான ஷெருவுக்கு, சாப்பாடு போட்டு வளர்த்து வந்துள்ளார்.

நாய் ஷெருவும் அவரது வீட்டிலேயே தங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவர் வீட்டில் இல்லாததால் ஷோ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவருடன் நாய் ஷெருவும் இருந்துள்ளது.

ஞாயிறு பகல் 3 மணிக்கு ஷோ வீட்டுக்கதவை பக்கத்து வீட்டில் வசிக்கும் சுனில் என்பவர் தட்டியுள்ளார். கதவை திறந்தவுடன் ஷோவை வீட்டுக்குள் தள்ளிவிட்டு அவரை தாக்கியுள்ளார்.

பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். ஷோவின் அலறல் சத்தத்தை கேட்ட நாய் ஷெரு, சுனில் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

நாயிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் வைத்திருந்த கத்தியை வைத்து நாயை தாக்கியுள்ளார் சுனில். ரத்தக்காயத்துடன் நாய் தொடர்ந்து சுனிலை தாக்கியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

காயமடைந்த நாய் ஷெருவுக்கு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஷோ அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி சுனிலை போலீசார் தேடி வருகின்றனர்.