இது தான் நாய் பட்ட பாடு என்பார்களோ..

1077

புதுச்சேரி மாநிலம் வெங்கட்டா நகர் பகுதியில் தெரு நாய் ஒன்று 10 நாட்களுக்கு மேலாக பிளாஸ்டிக் குடத்தில் தலையை மாட்டிக்கொண்டு உணவு அருந்த முடியாமல் தவித்து வந்தது.

This image has an empty alt attribute; its file name is dog-viral-1024x576.jpg

இதனை அறிந்த சமூக ஆர்வலர் ராஜா, தனது நண்பர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு உறுப்பினர்கள் உதவியுடன் 1 மணி நேரம் போராடி கழுத்தில் மாட்டிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் குடத்தை அகற்றினர். குடத்தை அகற்றியதும் அந்த நாய் துள்ளி குதித்து ஓடியது. இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நாய் ஒன்று 10 நாட்களுக்கு மேலாக அவதிப்பட்டு வந்த நிலையில், சமூக அக்கறையுடன் அதனை அகற்றிய ராஜாவிற்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement