அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

557

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரிஹரன் என்பவர், அவரது 3 வயது மகளை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் ஒன்று அந்த சிறுமியை கடித்து குதறியுள்ளது. சிறுமியின் தந்தை ஹரிஹரன் மருத்துவமனையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மருத்துவமனை வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதாகவும், இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், மருத்துமனை நிர்வாககம் இதுத்தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of