கிம் ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் – டொனால்டு ட்ரம்ப்

198
kim-jong-donald-trump

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா நட்சத்திர விடுதியில் முதல் முறையாக வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா-வடகொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பொருளாதார தடை, அணுஆயுத குறைப்பு குறித்த ஒப்பந்தமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இரு துருவங்களும் சந்திப்பதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here