இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் : அகமதாபாத்தில் உற்சாக வரவேற்பு

429

001 2 நாள் அரசு முறை பயணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபருக்கான ஏர் போர்ஸ் ஒன் சிறப்பு விமானம் மூலம் வந்ததிருங்கிய டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

004அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். டிரம்ப்புடன், அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் மனுசின், வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் ஆகியோரும் வந்துள்ளனர்.

டிரம்புக்கு குஜராத் மாநில பரம்பிரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தும், கலைஞர்கள் நடனமாடியும் டிரம்பை வரவேற்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் முதன் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்