முதன்முறையாக இந்தியா வரும் டிரம்ப்

293

அரசு முறை பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பிற்பகலில் இந்தியா வருகிறார். தனி விமானம் மூலம் வரும் டிரம்ப்பை பிரதமர் மோடி அகமதாபாத்தில் வரவேற்க உள்ளார். முதன்முறையாக இந்தியா வரும் டிரம்ப் இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி பட்டியல் :

காலை 11.40 மணி : ஆமதாபாத் விமான நிலையத்திற்கு வரும்
பிற்பகல் 1 மணி : “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்ப்பு
பிற்பகல் 3.30 மணி : விமானம் மூலம் ஆக்ரா செல்லும் டிரம்ப்
மாலை 6.45 மணி : டெல்லி செல்லும் டிரம்ப்

நாளை காலை 10 மணி : குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்புக்கு வரவேற்பு
நாளை காலை 11 மணி : ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் – அதிபர் டிரம்ப் சந்திப்பு
நாளை இரவு 10 மணி : இந்திய பயணம் முடிந்து புறப்படுகிறார் டிரம்ப்