‘வரிவிதிப்பு ராஜா’ மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் டிரம்ப்..,

781

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய கடந்த ஆண்டு உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜா’ (இந்தியா)  அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்ததற்கான காரணம் என்ன? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதிக்கிறது. இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது அதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்தேன் என்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சர்வதேச அளவில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத இறக்குமதி வரி விதித்து பின்னர் 50 சதவீதமாக குறைத்தது, அதை மேலும் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் வரி விதிப்பை விமர்சிக்கும் விதமாக ‘இந்தியா வரிவிதிப்பின் ராஜா ‘ என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of