அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது: அதிபர் டிரம்ப்

655

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்காமல் இருக்க, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா
விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய
உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வரிவிதிப்பின் ராஜாவான இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து
கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதற்கு பதிலடியாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்படும் என்று எச்சரித்ததால், தன்னை மகிழ்விப்பதற்காக இந்தியா இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

Advertisement