“கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவிற்கு அவமானம்..”- டிரம்ப்

490

அமெரிக்காவின் அதிபராக தற்போது டெனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். இவரது ஆட்சிக்காலம் முடிய இருப்பதால், வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது.

ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் பதவிக்கு ஜோபைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்-ம் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் தொடர்பாக நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிபர் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய கமலாவை, ஜோ பைடன் தேர்வு செய்தது ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இவர் வந்தால் இது நாட்டுக்கு மிகவும் அவமானத்திற்குரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்ணும், ஆசிய – அமெரிக்க பெண்ணும் இவர் தான் என்று தெரிவித்தார்.

Advertisement