தொழில்துறையினர் அனைத்திற்கும் அரசையே எதிர்பார்க்க கூடாது – டிரம்ப் அறிவுரை

287

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொழிலதிபர்களிடம் உரையாற்றிய  டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி காலம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தொழில்துறையினர் எல்லாவற்றிக்கும் அரசையே எதிர்பார்க்க கூடாது என்று அறிவுறுத்திய அவர், தொழில் முனைவோரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், அமெரிக்காவின் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதிக்கும் விதிகளை தளர்த்த மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சீனா கடுமையாக போராடி வருவதாகவும், இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபராக தான் எடுத்த முயற்சிகள் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பலன் தந்ததாக குறிப்பிட்ட அவர், மீண்டும் தான் வெற்றி பெற்றால், பங்கு சந்தை ஏற்றமடையும் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ஆனந்த் மகேந்திரா, ரத்தன் டாடா, கவுதம் அதானி, லட்சுமி மிட்டால், அனி்ல் அகர்வால் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of