சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழி அரசியல் செய்வதை கைவிட வேண்டும் – மாஃபா பாண்டியராஜன்

150

சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழி அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர அரசு உறுதி அளித்துள்ளது என கூறிய அமைச்சர் பாண்டியராஜன், சாத்தான் குளம் விவகாரத்தில் கனிமொழி அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என கேட்டுகொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of