சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது..! அறிவியல் சொல்லும் அடடே காரணம்..!

645

பல பேர் சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்றும், குளித்துவிட்டு சாப்பிடு என்றும் கூறி வருவதைக் கேட்டிருப்போம். ஏன் குளிக்கக்கூடாது, எதற்கு குளிக்கக்கூடாது என்று நாமும் சில நேரங்களில் தெனாவட்டாக கேள்வியும் கேட்டிருப்போம்.

இன்னும் சொல்லப்போனால், சாப்பிட்டவுடன் குளிக்காதே என்று கூறும் பாதி பேருக்கு ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்ற அறிவியல் உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதன் அறிவியில் காரணம் என்னவென்றால், நம் சாப்பிட்ட உணவுகள் ஜீரணிக்க நொதிகள் தேவைப்படுகிறது. நம் உடலிலேயே இருக்கும் இந்த நொதிகள், குளிரான உடலில் குறைவாக சுரக்கும். சாப்பிட்டவுடன் நமக்கு அதிகமாக நொதிகள் தேவைப்படுகிறது.

அந்த நேரத்தில் நம் குளிக்கும் போது, உடல் குளிர்ச்சி அடைந்து நொதிகள் சுரப்பது குறையும். இதனால் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், குளித்தவுடன் நாம் உணவு உண்டால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளாலம்.

மேலும், குளித்தவுடன் நம் உடல் மிகவும் சுருசுருப்புடனும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது. குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை முழுவதுமாக பெற்று கொள்ளும்.