என்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி

1143

பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்று கூறியதாக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தன்னை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்ற தவறான பிரச்சாரம் பரவி வருவதாக குறிப்பட்டுள்ளார்.

தயவு செய்து தன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் என்றும், தன்னை கெளரவிக்க விரும்பினால், கொரோனா பாதிப்பு முடியும் வரை, ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏழை குடும்பத்திற்கு உதவுவதைவிட, தனக்கு நீங்கள் சிறந்த மரியாதையை அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of