இரட்டைத் தலையுடன் கண்ணாடி விரியன் பாம்பு..! வைரல் வீடியோ..!

642

பாம்பு வகைகளில் கொடிய விஷம் கொண்டது கண்ணாடி விரியன் ஆகும். இந்த பாம்பு கடித்தால், சில நேரங்களில் உயிர் பறிபோகும் நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் இரட்டைத் தலை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.

11 சென்டி மீட்டர் நீளம் கொண்ட இந்த பாம்பை, அங்கிருந்த நபர் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

மேலும், மரபனு பிரச்சனை காரணமாக இரட்டை தலையுடன் அந்த பாம்பு பிறந்துள்ளது என்றும்,  நீண்ட நாட்கள் இந்த பாம்பு வாழ்வது கடினம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement