100 சதவீதம் வாக்களிக்க சொன்ன டிராவிடுக்கே இந்த நிலையா? – அதிர்ந்த டிராவிட்

827

கர்நாடகா தேர்தல் ஆணையத்தின் தூதரும் கிரிக்கெட் ஆளுமையுமான ராகுல் திராவிட் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படவே இல்லை. இதனால் ஏப்ரல் 18-ல் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் ஜனநாயகத்தைக் காக்கும் பிரச்சாரகருக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் வேறு எங்கு நடக்க முடியும்? நம் நாட்டில்தான்.

‘உங்கள் வாக்குகளை அளியுங்கள், ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யுங்கள்’ என்ற பிரச்சாரத்தின் தலைமையே ராகுல் திராவிட்தான்.

அதாவது ஃபார்ம் -6 என்ற படிவத்தை ராகுல் திராவிட் குறித்த காலத்துக்குள் சமர்ப்பிக்காததால் அவரது வாக்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்திரா நகர் 12வது மெயின் ரோட்டில் வசிப்பவர் ராகுல் திராவிட். இது சாந்திநகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ளது.

இவர் முறையாக தன் வாக்கைப் பதிவு செய்தவர் என்ற அடிப்படையில் கர்நாடகா தேர்தல் ஆணையம் இவரை தூதராக நியமித்தது.

இந்நிலையில் ‘திராவிட் வாக்களிக்க முடியாது என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது’ என்று தேர்தல் அதிகாரி ஆங்கில நாளேடு ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 31, 2018-ல் திராவிடின் சகோதரர் விஜய் ஃபார்ம் 7 என்ற பெயர் நீக்க படிவத்தை அளித்தார்.

அதாவது திராவிடும் மனைவி விஜேதாவும் இந்திரா நகரிலிருந்து அஷ்வத் நகருக்கு குடிமாறிவிட்டதாக அவர் அந்தப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார்,

இதனையடுத்து திராவி, விஜேதா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீக்கிய பிறகு சேர்ப்பதற்கான ஃபார்ம் 6-ஐ திராவிட் அளிக்கத் தவறிவிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of